முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் இன்று (21.03)  கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

images/content-image/1711027190.jpg

இதன்போது  சிறிய பொதிகளாக தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 160 பக்கட் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் 31 வயதான இளைஞர் ஒருவர் கைதுஐ செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணைகளின் பின் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதகா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!