சிறையிலிருந்து விடுதலையான வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #Vedukunarimalai Adilingeswarar Temple
Mayoorikka
1 year ago
சிறையிலிருந்து விடுதலையான வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த எட்டுப்பேரையும் விடுதலைசெய்து வவுனியா நீதிமன்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவு பிறப்பித்தது.

 இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் புதன்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5நாட்கள் சிறைச்சாலையில் அவர் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!