கொழும்பில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலை: போராட்டகாரர்களின் ஆடைகளை களைந்த பொலிஸார்

#SriLanka #Colombo #Protest
Mayoorikka
1 year ago
கொழும்பில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலை: போராட்டகாரர்களின் ஆடைகளை களைந்த பொலிஸார்

கொழும்பில் சற்றுமுன் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக இன்று (20) இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டம் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

images/content-image/2024/03/1710931895.jpg

 இதன்போது போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பத்திற்கும் மேற்பட்ட நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது மட்டுமன்றி போராட்டக்காரர்களை தாக்கி நடத்தி ஆடைகள் களையப்பட்ட அவலமும் நடந்துள்ளது.

 மேலும் இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!