இந்திய காலனித்துவ எதிர்ப்பு: தடையுத்தரவு நிராகரிப்பு

#India #SriLanka #Protest
Mayoorikka
1 year ago
இந்திய காலனித்துவ எதிர்ப்பு: தடையுத்தரவு நிராகரிப்பு

“இந்திய காலனித்துவத்துக்கு எதிராக” என்ற தலைப்பில் முன்னிலை சோசலிசக் கட்சி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் பேரணியை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நிராகரித்துள்ளார். 

 நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சரத்துக்களால் தணிக்கை செய்ய முடியாது என பிரதான நீதவான் சுட்டிக்காட்டினார்.

 பேச்சுரிமை, ஒன்றுகூடல் சுதந்திரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் 14வது சரத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் உத்தரவை நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது எனவும், அணிவகுப்பு அல்லது போராட்டத்தை தடுப்பதற்கு போதுமான உண்மைகள் நீதிமன்றத்தின் முன் இல்லை எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

 இந்தப் போராட்டத்தின் மூலம் ஒடுக்குமுறைச் சூழலை உடனடியாகத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!