ரோஹித அபேகுணவர்தன பதவி விலகாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் - நளீன் பண்டார

#SriLanka #Parliament #strike #Resign #hunger #Cope
Prasu
1 year ago
ரோஹித அபேகுணவர்தன பதவி விலகாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் - நளீன் பண்டார

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த நியமனம் கோப் குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப் குழுவில் இருந்து சுமார் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், கோப் குழுவின் தலைவர், அந்த பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், அந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!