கோப் குழுவில் இருந்து மற்றுமோர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் இன்று (20.03) காலை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
அப்போது எழுந்து நின்ற வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார். விரைவில் பதவி விலகலை எழுத்துப்பூர்வமாக வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இராஜினாமா செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களில் அடங்குவர்.



