25 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!
#SriLanka
#Tourist
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இலக்கை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வருட காலப்பகுதியில் 500,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.