மகா சிவராத்திரியன்று இவ்வாறான அபிஷேகங்களை செய்தால் இப்படியான பலன்களை அடையலாம்

#God #spiritual #Day #fasting
Mugunthan Mugunthan
9 months ago
மகா சிவராத்திரியன்று இவ்வாறான அபிஷேகங்களை செய்தால் இப்படியான பலன்களை அடையலாம்

மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு விருப்பமான பொருட்களை படைத்து வழிபட வேண்டும். சிவராத்திரியன்று செய்யப்படும் பூஜை, அபிஷேகம் ஆகிய அனைத்தும் பல மடங்கு பலனை கொடுக்கும். 

சிவராத்திரியன்று சிவனுக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான பலனை தரக் கூடியதாகும். மகா சிவராத்திரியன்று சிவனுக்கு 32 பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். 

இவற்றில் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 08ம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி திருநாள் வருகிறது.

மகா சிவராத்திரி நாளில் என்ன பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம். செல்வ வளம் பெரும்க வேண்டும், பொருளாதார ஸ்திர தன்மை ஏற்பட, வருமானம் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறவர்கள் மகா சிவராத்திரி அன்று, சிவ லிங்கத்திற்கு ருத்ர அபிஷேகத்துடன் தயிர் மற்றும் கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்யலாம். 

images/content-image/1709043172.jpg

அதே போல் சிவலிங்கத்திற்கு தேன் மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்ய பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் திரும்பி வராமல், உங்களுக்கு வர வேண்டிய பணம் வராமல் தடைபட்டு கிடக்கிறது என்றால் மகா சிவராத்திரி அன்று சிவனின் வாகனமாக நந்திக்கு அருகம்புல் சாற்றி வழிபடலாம்.

 பசு மாட்டிற்கு புல், அகத்திக்கீரை போன்ற பசுந்தீவனங்களை சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் சிவனின் அருளால் உங்களுக்கு வர வேண்டிய பணம் மளமளவென வந்து சேரும்.

வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, ப்ரொமோஷன் இல்லை, சம்பள உயர்வும் இல்லை, தொழிலை செய்ய முடியாமல் கடுமையான போராட்டம், போதிய வருமானம் இல்லை, எந்த முன்னேற்றமும் இல்லை என்பவர்கள் மகா சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு தண்ணீரில் தேன் கலந்த அபிஷேகம் செய்யுங்கள்.

 அதோடு சிவலிங்கத்திற்கு மாதுளை மலர் கொண்டு பூஜை செய்யுங்கள். இப்படி செய்வதால் சிவனின் அருளால் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அனைத்து சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

images/content-image/1709043331.jpg

சிவனின் மனதை குளிர வைப்பதற்கு அல்லது மகிழ்விப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும். இதற்கு சிவனுக்கு விருப்பமான வில்வம், சந்தனம் போன்றவற்றை அவருக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். முடிந்தால் ஓம் நம சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த படியே வெள்ளி பானை அல்லது செம்பில் தண்ணீர் நிரப்பி வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

 இப்படி செய்வதால் உங்களின் ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்வில் பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்கள், அதனால் மிகுந்த மன வேதனையும், குழப்பமும் அடைகிறீர்கள். அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறீர்கள் என்றால் மகாசிவராத்திரி நாளில் விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.  இதனால் சிவ பெருமான் மகிழ்ச்சி அடைந்து, உங்களுக்கு ஆசி வழங்குவார். இதனால் உங்களின் பிரச்சனைகள் படிப்படியாக குறையம்.

ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகள் சரியில்லை, இதனால் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகி உள்ளீர்கள் என்றால் மகாசிவராத்திரி நாளில் ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்த படி பால் மற்றும் அரிசி மாவால் அபிஷேகம் செய்யலாம். இதனால் கிரக நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து, நன்மைகள் நடைபெற துவங்கும். அகால மரணம் ஏற்படுவது நீங்கும், ஆயுள் நீடிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!