தைரியத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடையும் மிதுன ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
தைரியத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடையும் மிதுன ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: ஆரோக்கியம் சீராகும். துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக்கொள்வீர்கள். ரோகிணி: திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். உங்கள் முயற்சி நிறைவேறும். திருவாதிரை: உறவினர்கள் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3: தைரியமுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நிதிநிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4: இரண்டு நாளாக இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூசம்: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். பொருளாதார நிலை உயரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம்: முந்தைய அனுபவத்தைக் கொண்டு செயலில் லாபம் காண்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

மகம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நன்மையாகும். பூரம்: செலவு கட்டுக்குள் வரும். யோசித்து செயல்பட நன்மை அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் அவசியம். உத்திரம் 1: நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். கவனமுடன் செயல்பட்டு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். அஸ்தம்: உங்கள் முயற்சிகள் இன்று தள்ளிப்போகும். பண வரவில் இருந்த தடை விலகும். சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் தோன்றும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுவாதி: வியாபாரத்தை விரிவுசெய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விசாகம் 1,2,3: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பாராத வரவு வந்து சேரும். அனுஷம்: செய்து வரும் தொழிலை விரிவு செய்ய நண்பர்களுடன் ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டாகும். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் தெளிவு உண்டாகும். பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். முயற்சிகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உத்திராடம் 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். திருவோணம்: வழிபாடு சங்கடங்களை நீக்கும். உங்கள் செயல்களில் எச்சரிக்கை அவசியம். அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் விழிப்புணர்வு அவசியம். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சதயம்: குடும்பத்தில் உண்டான சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: பணியிடப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயலை மீண்டும் தொடர்வீர்கள். ரேவதி: நீண்ட நாட்களாக நீடித்துவரும் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.