கனடாவில் இரயில் தொழிற்சங்கங்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் இறங்கத் திட்டம்
#Canada
#strike
#Employees
#Train
#Canada Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
கனடாவின் இரயில் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து பணி நிறுத்த போராட்டத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.
ஊழியர்களின் பணி ஒப்பந்தங்கள் தொடர்பில் எழுந்த சர்சைகளின் விளைவாக இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தொழிற்சங்கங்களிலும் சுமார் 9300 பணியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமூகமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக இந்ததொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.