பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் கொள்ளை

#India #Robbery #Jewelry #Cricket #money #Player #House
Prasu
1 month ago
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் கொள்ளை

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

யுவராஜ் சிங்கின் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய் உள்ளது. 

இதுபற்றி யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வீட்டு வேலை செய்து வந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 11-ம் தேதி தனது வீட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த சம்பவம் நடந்த சில தினங்களில் இப்போது யுவராஜ் சிங்கின் வீட்டில் கொள்ள சம்பவம் நடந்துள்ளது.