கனடாவில் இந்து கோயில் உண்டியல்களை உடைத்து கொள்ளை
#Hindu
#Canada
#Temple
#Robbery
#money
Prasu
1 year ago
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள இந்து கோவில்களை குறிவைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது குறித்து இந்தோ-கனடிய சமூகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சமீபத்திய சம்பவம் இந்த வார தொடக்கத்தில் ஓக்வில்லி நகரில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்தில் பதிவாகியுள்ளது.
நள்ளிரவில் அல்லது அதிகாலையில், அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலில் உள்ள சிலைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த காணிக்கை பெட்டிகளில் இருந்து கணிசமான தொகையை கொள்ளையடித்துள்ளனர்.
அதேபோல் பாதுகாப்பு கமராக்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தோ – கனேடிய சமூகம் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.