இன்று பிரான்ஸிற்கு வருகை தரவிருக்கும் உக்ரைனிய ஜனாதிபதி
#France
#today
#Ukraine
#President
#France Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky இன்று பெப்ரவரி 16 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பரிசுக்கு வருகை தர உள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை எலிசே மாளிகையில் வைத்து சந்தித்து உரையாட உள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னணியில், ’பிரான்ஸ் மற்றும் உக்ரேன் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தந்தில் கைச்சாத்திட இந்த வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் பிரான்ஸ் தனது ஆதரவு நிலைப்பாட்டை உக்ரேனுக்கு வழங்கு வருகிறது. இதுவரை பல முறை ஆயுதங்கள் வழங்கியுள்ளதுடன், பல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பெரும் தொகை பணத்தையும் வழங்க சம்மதித்திருக்கிறது.
கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி, 27 ஐரோப்பிய நாடுகள் இணைந்து 50 பில்லியன் யூரோக்கள் நிதியினை உக்ரேனுக்கு வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.