வெளியாகவுள்ள தீர்ப்பு: முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோரினார் ஞானசாரதேரர்!

#SriLanka #Court Order #Gnanasara Thero #Muslim
Mayoorikka
1 year ago
வெளியாகவுள்ள தீர்ப்பு: முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோரினார்  ஞானசாரதேரர்!

2016ம் ஆண்டு குரலக ஆலயத்தில் தெரிவித்த கருத்துக்களிற்காக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

 எட்டுவருடங்களிற்கு முன்னர் நான் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மனஉளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நாட்டின் முஸ்லீம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன் என ஞானசாரதேரர் கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

 எனது நடவடிக்கைகளிற்காக நாட்டில் உள்ள முஸ்லீம்மக்களிடம் ஆழ்ந்தகவலையை தெரிவிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். ஞானசாரதேரரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மார்ச்28ம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு மார்ச் 30ம்திகதி ஆலயத்தில் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்துக்கள் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்து சட்டமாஅதிபர் வழக்குதாக்கல் செய்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!