நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை! மஹிந்த

#SriLanka #Mahinda Rajapaksa #Sri Lanka President
Mayoorikka
1 year ago
நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை! மஹிந்த

நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை அனுபவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

 நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது நல்லது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம் எங்களிற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறித்து நன்கு தெரியும் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 எந்ததேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக உணரதலைப்பட்டுள்ளமை மகிழ்;ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!