ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தமை தொடர்பில் மனுத்தாக்கல்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதியரசர் திரு.நிஷங்க பந்துல கரணாரத்னவை உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி சரித் மஹிபுத்ரா, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியலமைப்பின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை பிரதிவாதிகளாக பெயரிட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தமை தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற முடிவு என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.



