ஹட்டனில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

#SriLanka #School #Student #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஹட்டனில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக  சுமார் 5 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர்  பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சந்தன கமகேவின் முயற்சியின் பேரில் 44 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!