கிளிநொச்சியில் டக்ளஸின் தலைமையில் ஆரம்பமான கூட்டம்!
#SriLanka
#Meeting
#Kilinochchi
#Development
Mayoorikka
1 year ago

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகளிற்கான திட்ட மும்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



