அமெரிக்காவில் இந்திய தம்பதியினர், மற்றும் அவர்களின் குழந்தைகள் சடலமாக மீட்பு!
#SriLanka
#America
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள வீடொன்றில் இந்திய தம்பதியர் மற்றும் அவர்களின் இரட்டை குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
42 வயதான ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது மனைவி அலைஸ் பிரியங்கா,( 40) மற்றும் 04 வயதுடைய அவர்களது இரட்டை குழந்தைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தம்பதியினர் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வீட்டில் துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.