கனடா ஒன்றாரியோவிலுள்ள கார்ல்ஸ்டன் நதியில் மீன்பிடிக்கச் சென்ற மூவரில் இருவர் உயிரிழப்பு

#Police #Canada #Fisherman #River #Canada Tamil News
Mugunthan Mugunthan
2 months ago
கனடா ஒன்றாரியோவிலுள்ள கார்ல்ஸ்டன் நதியில் மீன்பிடிக்கச் சென்ற மூவரில் இருவர் உயிரிழப்பு

ரொறன்ரோவில் மீன் பிடிக்கச் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பனிப்பொழிவினால் நதிகளில் பனி படர்ந்துள்ள நிலையில் மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இவ்வாறு மீன் பிடித்துக்கொண்டிருந்த மூவர் திடீரென பனிப்பாறை உடைந்து நதியில் மூழ்கியுள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கிய மூவரில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.

 ஏனைய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காலப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது ஆபத்தானது என பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஒன்றாரியோவின் கார்ல்ஸ்டன் நதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஓரளவு வெப்பநிலை நிலவும் காலப் பகுதியில் பனிபடர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.