ஏமனில் கண்ணிவெடியில் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு
#Death
#children
#War
#land
#Blast
#Mine
#Yemen
Prasu
1 year ago
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, ஏமன் அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ஏமன் நாட்டின் தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.
கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.