கொரியாவில் பணிபுரிந்து வரும் இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
#SriLanka
#SouthKorea
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பல வருடங்களாக தென்கொரியாவில் பணிப்புரிந்து வந்த இளைஞர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், உயிரிழந்துள்ளது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பளை பகுதியில் வசிக்கும் 30 வயதான மகேஷ் சமரநாயக்க என்ற இளம் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மீண்டும் கொரியாவுக்கு புறப்பட்ட நிலையில், மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்து ஸ்தலத்திலேயே பலியாகியதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறிய நிலத்துண்டை வாங்கி அதில் மரம் வெட்டு தொழிலை மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறாக இரு மரங்களை ஒன்றாக வெட்டியபோது விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.