12 வழக்குகளில் ஜாமீன் பெற்ற முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
#Arrest
#Pakistan
#ImranKhan
#Case
#Politician
#Bail
Prasu
1 year ago

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமருக்கு 12 வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது.
இம்ரான் கானைத் தவிர, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் 13 குற்றச்சாட்டுகளில் ஜாமீன் பெற்றுள்ளார், ஆனால் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



