புளோரிடாவில் நடுவீதியில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் : இருவர் பலி!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
#Jet
Thamilini
1 year ago
புளோரிடாவில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
விபத்திற்குள்ளான போது ஜெட் விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் மூவரின் உயிரை மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபிள்ஸ் முனிசிபல் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன், விமானத்தின் இயந்திரம் நின்றுவிட்டதாகவும், அவசரமாக தரையிறக்கம் தேவை என்றும் விமானி போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் கூறியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.