கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி

#Health #people #Healthy #Vaccine #Mumbai #lanka4Media #lanka4.com #cholesterol
Prasu
3 months ago
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி

நம்முடைய இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரியான அளவு பராமரிக்க வேண்டியது அவசியமாகும். 

சில வருடங்களாக மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அதிலொரு முக்கியமான மருந்துதான் Inclisiran. இந்த புதிய மருந்திற்கான சோதனை தற்போது மும்பையிலுள்ள KEM மருத்துவமணையில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதுவரை நேர்மறையான முடிவுகளே கிடைத்துள்ளதாகவும் கொலஸ்ட்ரால் பராமரிப்பில் இந்த மருந்து நிச்சயம் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

images/content-image/1706307186.jpg

அதிக கொலஸ்ட்ரால் அளவை இந்த மருந்து எப்படி குணப்படுத்தும், இதன் விலை என்ன போன்ற விபரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் என அழைக்கப்படும் LDL கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமாக இருந்தால் இதய தமனியில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.

இதனால் இதய சம்மந்தமான நோய் வரும் ஆபத்து அதிகரிக்கும். Leqocin என்ற பெயரில் அறியப்படும் Inclisiran மருந்து, நம்முடைய உடலில் உள்ள ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1706307198.jpg

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க ஏற்கனவே பல மருந்துகள் இருக்கும்பட்சத்தில், அதையெல்லாம் விட இந்த மருந்தில் என்ன விசேஷம் இருக்கிறது என்று கேட்டால் இதன் விரைவான செயல்பாட்டை கூறலாம். Inclisiran மருந்து RNA குறுக்கீடாக செயல்பட்டு, நமது கல்லீரலில் உள்ள ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் அளவை மரபணு அடிப்படையில் குறைக்கிறது.

இந்த மருந்து குறிப்பிட்ட புரதத்தை உற்பத்தி செய்வதன் மூலம் ரத்தஓட்டத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. வழக்கமாக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுத்தும் மருந்துகளை தொடர்ச்சியாக கொடுக்க வேண்டி வரும். இதில்தான் தனித்து விளங்குகிறது Inclisiran. 

images/content-image/1706307207.jpg

இந்த மருந்தை வருடத்திற்கு இரண்டு முறை ஊசி மூலம் செலுத்தினாலே போதும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் சிறப்பாக பயனாற்றுகிறது Inclisiran. இதனால் அடிக்கடி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இனி ஏற்படாது.

வெற்றிகரமான பரிசோதனை முயற்சிக்குப் பிறகு, இந்திய மருந்துகள் கட்டுபாட்டு ஆணையம் (DCGI) Sybrava என்ற பெயரில் Inclisiran மருந்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் விலை ஏறக்குறைய இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் என்றளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

images/content-image/1706307220.jpg

ஆனால் மருந்து நிறுவனத்திற்கேற்ப இதன் விலையில் மாற்றம் இருக்கலாம். Inclisiran மருந்தின் தனித்துவமான RNAi அனுகுமுறை காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இதய நோய் வரும் ஆபத்தும் குறைகிறது. 

இந்த மருந்தின் விலை அதிகமாக இருந்தாலும், நமது ஆயுளை நீட்டிக்கும் தன்மை இதற்கு இருப்பதால் நீண்ட கால நோக்கிலான கொலஸ்ட்ரால் பராமரிப்பிற்கு இந்த மருந்தை தாராளமாக வரவேற்கலாம்.