ஆறாவது முறையாக 19 வயதிற்கு உட்பட்ட உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்தியா

#India #Cricket #WorldCup
Prasu
4 months ago
ஆறாவது முறையாக 19 வயதிற்கு உட்பட்ட உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்தியா

ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்கள் குவித்தது. 

ஆயுஷ் மாத்ரே 53 ஓட்டங்களும் வேதாந்த் திரிவேதி 32 ஓட்டங்களும் விஹான் மல்கோத்ரா ஓட்டங்களும் அபிக்யான் கந்து 40 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 412 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 311 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில், பென் டாவ்கின்ஸ் 66 ஓட்டங்களும் பென் மேய்ஸ் 45 ஓட்டங்களும் கலெப் பால்கனர் 115 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனால் இந்தியா 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4