36 பேரை தீ வைத்து கொன்ற நபருக்கு 4 வருடங்களுக்கு பிறகு மரண தண்டனை
#Arrest
#Murder
#Court Order
#Japan
#fire
#lanka4Media
#lanka4.com
#penalty
Prasu
1 year ago

அனிமேஷன் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதில் ஜப்பானின் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ முன்னணி நிறுவனமாக உள்ளது
இந்த நிறுவனம் தனது கதையை திருடிவிட்டதாக அயோபா என்பவர் குற்றம் சாட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019-ல் அந்த நிறுவனத்தை அவர் தீயிட்டு கொளுத்தினார்.
இதில் உடல் கருகி 36 பேர் இறந்தனர். இந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள அனிமேஷன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு கியோட்டோ நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அயோபா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.



