அங்காடிசாலையில் 19 டிவிகளை அடித்து நொறுக்கிய நபர்(காணொளி)

#Arrest #America #Attack #shop #Electric #lanka4Media
Prasu
1 year ago
அங்காடிசாலையில் 19 டிவிகளை அடித்து நொறுக்கிய நபர்(காணொளி)

உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட். டெக்சாஸ் மாநில ரியோ கிராண்டே (Rio Grande) நகரில் வால்மார்ட்டின் கிளை ஒன்று செயல்படுகிறது. 

இங்கு பல முன்னணி மின்னணு பொருட்கள் விற்கப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன் எசக்கியல் மெண்டோசா (Ezequiel Mendoza) என்பவர் பொருட்கள் வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்தார்.

அக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு பேஸ்பால் பேட்டை கையில் எடுத்த மெண்டோசா, திடீரென அங்கு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தாக்க தொடங்கினார்.

கடை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மடக்கி, கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

 அதற்குள் மொத்தம் 19 தொலைக்காட்சிகளை மெண்டோசா அடித்து நொறுக்கி விட்டார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் ($7178) ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!