விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானத்தின் காணொளி வெளியீடு

ரஷிய-உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ளது, பெல்கொரோட் (Belgorod) பகுதி. கடந்த 2022 பிப்ரவரி தொடங்கிய ரஷிய-உக்ரைன் போரில் இந்நகரம் பல முறை தாக்குதலுக்கு உள்ளானது.
ரஷியாவின் இல்யுஷின்-76 ரக போக்குவரத்து விமானம் ஒன்று, உக்ரைனிலிருந்து ரஷியாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் தென் பெல்கொரோட் பகுதியில் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 65 உக்ரைன் வீரர்களும் உயிரிழந்தனர். இத்தகவலை வெளியிட்ட பெல்கொரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் க்ளாட்கோவ் (Vyacheslav Gladkov), "புலனாய்வு படையும், அவசர கால சேவை பணியாளர் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
எனது பயண திட்டங்களை மாற்றி நானும் அங்கு செல்கிறேன்" என தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம், விமான பணியாளர்களின் நிலை உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் தற்போது வரை தெரியவில்லை.




🇷🇺🚨UPDATE-;--Russian military plane crashes in Belgorod region.
— EUROPE CENTRAL (@europecentrral) January 24, 2024
Russian government says plane which crashed near Belgorod was carrying 74 people, including 65 Ukrainian prisoners#Russia #Planecrash #Belgorod #Russianmilitaryplane #BREAKING_NEWS #RussianPlane pic.twitter.com/jC7BRVLLRV