சீனாவில் ஷாப்பிங் மாலில் தீவிபத்து : 39 பேர் பலி!
#SriLanka
#China
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சீனாவின் தென்கிழக்கு ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜியாங்சி மாகாணத்தின் யூசுய் மாவட்டத்தில் உள்ள ஷாப்பிங் மாலின் அடிப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.