இலங்கையில் உணவுக்காக மக்கள் அல்லலுறுவதற்கு காரணம் இயற்கையா? அரசாங்கமா?

#SriLanka #prices #Food #Vegetable #Lanka4 #Economic #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
3 months ago
இலங்கையில் உணவுக்காக மக்கள் அல்லலுறுவதற்கு காரணம் இயற்கையா? அரசாங்கமா?

இலங்கையில் தற்பேது என்றுமில்லாத வகையில் மரக்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

அதற்கு காரணம் புதிய ஆண்டில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி அதிரிப்பு என பலரும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகின்ற அதேவேளை, அதிக மழை வீழ்ச்சியே மரகறிகளின் விலைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என அரசாங்கம் கூறுகிறது. 

ஆனால், தற்போது மழை வீழ்ச்சி குறைந்துள்ளது. இருப்பினும் மரக்கறிகளின் விலைகள் குறையவில்லை.

images/content-image/1705664826.jpg

மரக்கறிகள் அதிகளவில் பதுளை மாவட்டத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. கலப்பு விதைகளால் உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் கலப்பின விதைகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. 

இவ்வாறான பல காரணிகள் காரணமாகவே மழை வீழ்ச்சி குறைவடைந்தாலும் மரகறிகளின் விலைகள் குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைக்கின்றன. 

கனமழை காரணமாக உள்ளூர் மரக்கறிகள் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலை மிக அதிகமாக உள்ளது. 

உற்பத்தி குறைவடைவது ஒருபுறமிருக்க இன்னொரு புறம் விதைகளும் கலப்புகளாக உள்ளன. அதேபோன்று தரமற்ற உரங்கள் பயன்படுத்துவதாலும் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.