மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல ஆபாச பட நடிகை

#Death #Police #Investigation #Actress #Sex #Peru #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல ஆபாச பட நடிகை

பெரு நாட்டைச் சேர்ந்த நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதில் அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் கூறியிருந்தார். பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. 

அதை அம்பலப்படுத்திய இவர், "என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது. 

இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது''என வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!