இறக்குமதி தடை விதிக்கப்பட்ட மற்றுமொரு உணவுப் பொருள்!

#SriLanka #Douglas Devananda #Fish #Lanka4 #Import
Mayoorikka
1 year ago
இறக்குமதி தடை விதிக்கப்பட்ட மற்றுமொரு உணவுப் பொருள்!

வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

 கடற்றொழில் அமைச்சருக்கும் டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டில் டின் மீன் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 அத்துடன், அண்மைய மாதங்களில் சுமார் 8,000 தொன் டின் மீன் இறக்குமதியானது உள்நாட்டு விற்பனையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் டின் மீன் உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

 இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அமைச்சின் செயலாளருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாபணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!