மின் கட்டணத்துடன் சேர்த்து நீர் கட்டணமும் குறைக்கப்படும் : ஜீவன் தொண்டமான்!
#SriLanka
#water
#Electricity Bill
#Tamilnews
#sri lanka tamil news
#JeevanThondaman
Thamilini
1 year ago
மின் கட்டணத்தில் எதிர்பார்க்கப்படும் குறைப்புடன், நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (11.01) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
"இனிமேல் தண்ணீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.
தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று. எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் செய்வோம். தண்ணீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.