இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு

#SriLanka #government #Asia #Social Media #Internet #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு

இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என கூகுள் மெட்டா அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிய இணைய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆசிய இணைய கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. உத்தேசசட்டமூலம் அதன் வடிவத்தில் தற்போது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது என ஆசிய இணையகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் தடை செய்யப்பட்ட அறிக்கைகள் என்பதை பரந்துபட்ட அளவில் வரையறை செய்கின்றது இணையவழி கருத்துப்பரிமாறை சட்ட விரோதமாக்குகின்றது என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தணிக்கை மற்றும் கருத்துவேறுபாடுகளை அடக்குதல் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன இதன்காரணமாக சட்டநிச்சயமற்ற தன்மைதேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறான அல்லது தீங்குஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது என்பது கருத்துச்சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!