பொதுஜன பெரமுனவில் ஹொலிவூட் மற்றும் பொலிவூட் தர நடிகர்கள் உள்ளனர் - கபீர் ஹாசீம்
வரித் திருத்தங்கள் ஊடாக சாதாரண மக்கள் மீதே அரசாங்கம் அதிகளவு சுமையை சுமத்தியுள்ளது. மாறாக செல்வந்தவர்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளனது. இது தவறான முன்னுதாரணமாகும். அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், பணம் இருப்பவர்களிடம் அதிக வரியும் இல்லாதவர்களிடம் குறைந்த வரியையும் அறிவிடும் முறைமையொன்று அவசியமாகும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, ஹொலிவூட் மற்றும் பொலிவூட்டில் இல்லாத நடிகர்கள் பொதுஜன பெரமுனவில் உள்ளனர். மஹிந்த ராஜபக்சதான் அதில் சிறந்த நடிகர். மக்களை முட்டாள்களாக்கும் ஒரு நடிகராக அவர் உள்ளார். வரவு - செலவுத் திட்டத்தில் வற் வரி உயர்வுக்கு கையை உயர்த்திவிட்டு இரண்டு நாட்களின் பின்னர் வரி அதிகரிப்புக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக மஹிந்த ராஜபக்ச கூறுகிறார்.
அவர் மூளை சரியாக வேளை செய்யாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை. சப்ரகமுவயில் இடம்பெறும் பெரேராவில் இரண்டு முகங்களை கொண்டுசெல்லும் “மாபபா“ வை போன்றவர்தான் மஹிந்த ராஜபக்ச. பாராளுமன்றத்தில் ஒருமுகத்தையும் வெளியில் ஒருமுகத்தையும் கொண்டுள்ளார்.
குறித்த கட்டிடம் அமைக்கப்பட உள்ள பகுதிக்கு ஒரு வருடத்துக்கு குத்தகை நிதியாக 35 இலட்சம் டொலர்கள் அறவிட வேண்டுமென மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், 5 இலட்சம் டொலர்களுக்குதான் வழங்கியுள்ளனர்” என்றார்.