தமிழரசுக் கட்சி தலைவர் விவகாரம்: இன்று காலை மூவரும் சந்திப்பு! இரகசிய வாக்கெடுப்புக்கு முடிவு
#SriLanka
#R. Sampanthan
#M. A. Sumanthiran
#Election
#Kilinochchi
#Lanka4
#TNA
#sritharan
Mayoorikka
1 year ago
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி எதிர்வரும் 21/01/2024 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயமுறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும்.