ஜனாதிபதி ரணில் உள்பட பல்வேறு பிரிவினருடன், கலந்துரையாடவுள்ள IMF பிரதிநிதிகள்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#IMF
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (11.01) முதல் ஒரு வார காலம் நாட்டில் தங்கியிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் குறித்த ஆய்வை இந்த பிரதிநிதிகளால் மேற்கொள்ள உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.