கிளிநொச்சியில் மருத்துவ பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு!
கிளிநொச்சி வைத்தியசாலையின் சுகாதார பரிசோதகர்கள் பணிமனையிலும், அனைத்து குடும்ப சுகாதார சேவை அலுவலகங்களிலும் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமையை கண்டித்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பணியாளர்கள், வைத்தியர்களுக்கு 50000 உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிடம் கொடுக்கப்பட்ட .3000 ரூபாய் மட்டும் அப்படியே உள்ளது என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மருத்துவ அதிகாரிகளுக்கு உயர்த்தப்பட்ட கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில், தங்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து , இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் வரும் 12 ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் அவசரகால சேவைகளுக்கு மட்டுமே உதவி செய்ய முன்வருவதாக அவர்கள் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.