ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு!
#SriLanka
#PrimeMinister
#Dinesh Gunawardena
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
இதேவேளை “ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம்.

இது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. நெருக்கடியைத் தணிக்க நிதி அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சகம் இடையே நீண்ட விவாதம் இடம்பெற்றது.
இதனை அடுத்து நாங்கள் பணிகளைத் தொடங்க முடிந்தது. அதன்படி, 2023 டிசம்பர் மாதத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சு வெளியிட்டது.
இது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்