அமெரிக்க பிரித்தானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹூதிகளின் ட்ரோன்கள்!
#UnitedKingdom
#America
#world_news
#Drone
PriyaRam
1 year ago
ஹூதிகளின் 21 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தெற்கு செங்கடலில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனால் காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறிய அமெரிக்கா நவம்பர் 19 முதல் செங்கடலில் வணிக கப்பல் பாதைகளில் ஹவுதிகளின் 26 ஆவது தாக்குதல் என கூறியுள்ளது.

இந்த தாக்குதல்கள் காரணமாக ஆபிரிக்காவைச் சுற்றி நீண்ட பயணத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக பல்வேறு கப்பல் தமது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.
இதேவேளை காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.