எங்கிருந்து வருகின்றது என தெரியாது எவ்வாறாயினும் போதைப்பொருள் தனக்கு கிடைத்து விடும்! யாழில் 21 வயது யுவதி வாக்குமூலம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையான பெண்ணொருவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 வயதான குறித்த யுவதி பெற்றோரை இழந்த நிலையில் அம்மம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.
யுவதியின் செலவிற்காக உறவினர்கள் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பவதனால் யுவதி போதைக்கு அடிமையாகியுள்ளதாக அம்மம்மா தெரிவித்துள்ளார். அவர் அதிகளவான போதைப் பொருள் எடுத்துக் கொள்வதனால் நிலை தடுமாறி உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி தனது பேத்தியை மீட்டுத் தருமாறு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதேவேளை குறித்த யுவதி போதை பொருளுக்கு அடிமையானவர் என பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு போதைப்பொருள் எங்கிருந்து வருகின்றது, எவ்வாறு கிடைக்கின்றது என தெரியவில்லை எனவும், எவ்வாறாயினதும் போதை பொருள் தனக்கு கிடைத்து விடும் எனவும் பொலிஸார் தான் கண்காணிப்பு கமரா பூட்டி கண்டு பிடிக்கவேண்டும் எனவும் யுவதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த யுவதியை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.