அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை!
#Home
#Development
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Homosexuality
#news
Thamilini
1 year ago
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50 வீதமானவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் பட்டா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போது 14,542 பேர் வசித்து வருகின்றனர்.
அதன்படி முதற்கட்டமாக 50 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்படும். ஏனைய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறிது காலம் எடுக்கும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.