இதுவரை 10 இலட்சம் பேர் வரி எண் பெற்றுள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Tax
Thamilini
1 year ago
இலங்கையில் வரி எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 10 இலட்சம் பேர் வரி எண் பெற்றுள்ளனர் அல்லது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனவரி 1ஆம் திகதி எமது திணைக்களத்தில் 437,547 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று அது 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்த வருமானப் பங்கீட்டைப் பார்த்தால் அதிக வருமானம் கொண்ட குழு சுமார் 20%. காணப்படுகிறது. அதாவது 50 இலட்சம் பேர் இருக்கின்றனர். இந்த 50 லட்சம் பேரை அடையாளம் காண்பதுதான் எங்களின் முதல் இலக்கு. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான வரி வருமானத்தைப் பெறும் திறன் கொண்டவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.