நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Dengue #news
Thamilini
1 year ago
நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி தற்போதுள்ள டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் சுகாதார அமைச்சில் ஆரம்பமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பொலிஸ் மற்றும் முப்படைகளின் தலைவர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்ட மட்டத்தில் இன்று (04.01) முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிக்கவும் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!