அடுத்த தேர்தலில் ரணில் தன் ஆட்சியை தக்க வைக்க எடுக்கும் ஆயுதம்! (Lanka4 இன் பிரத்தியேக செய்தி)
இலங்கையின் சென்ற தேர்தலில் ரணில் படு தோல்வியடைந்து ராஜபக்சே குழுமம் வென்று பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடியாலும் சில கட்சிகளின் தூண்டுதல்களாலும் ஆர்ப்பாட்டக்காரர்களாலும் சில கட்சி தொண்டர்களாலும் ராஜபக்சே குழுமம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
அவர்கள் வெளியேறும் பொழுது ஆட்யை ரணிலிடம் ஒப்படைத்துவிட்டு சென்று மீண்டும் இங்கைக்கு வந்தனர்.
ஆட்சியை பொறுப்பேற்ற ரணில், ஆட்சியையும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் அடக்கி உலக நாட்டின் உதவியோடும் சில பல கட்சி பிரமுகர்களின் உதவியோடும் கடன் இருந்தாலும் ஓரளவிற்கு மக்கள் மூச்சு விடும் அளவிற்கு ஆட்சி மெல்ல மெல்ல வீழ்ந்தும் எழுந்தும் நகர்த்துகின்றார்.
இலங்கையில் தற்பொழுது அதிக வெளிநாட்டு நாணயம் தேவைப்படுகின்றது. அதை இப்பொழுது சிறிதளவாவது சுற்றுலா பயணத்துறை மற்றும் இரத்தினக் கல் வியாபாரமும் ஈட்டிக் கொடுக்கிறது.

சுற்றுலா பயணிகளால் ஹொட்டேல்கள், இலங்கை உற்பத்தி வாசனைத் திரவியங்கள், இரத்தினக்கற்கள் போன்றவை நல்ல வியாபாரம் கண்டுகொண்டுவருகிறது.
அதேவேளையில் மேலும் இதை அதிகரித்து பல நாடுகளின் கப்பல்களை வரச் செய்யவும் சுற்றுலா பயணிகளையும் அதிகரிக்கவும் அதனால் பல கோடிகளைப் பெறலாம் எனவும் சில வெளி நாடுகளின் ஆலோசனையுடனும், உதவியோடும் ரணில் அரசு முயன்றுவருகின்றது.
இதனால் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தால் நாட்டையே முன்னேற்ற முடியும் என ரணிலின் பல ஆலோசகர்களின் அறிவுரையோடும் வீறு நடைபோடுகிறார்.
இவரது நோக்கம் நிறைவேறும் பட்சத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்து அடுத்த தேர்தலில் வெல்லலாம் எனவும் காய் நகர்த்தப்படுகின்றதாம்.
எது எப்படியோ முழு இலங்கை மக்களுக்கும் நல்ல சுபீட்ச வாழ்வு கிடைத்து மூவினமும் ஒற்றுமையாக அரசியல் வியாபாரிகளின் பிடியிலும் துவேசிகளின் பிடியிலும் இருந்து விலகி நல்ல அபிவிருத்தி மூலம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும் அதுவே எமது lanka4 ஊடகத்தின் வேண்டுதலும் ஆகும்.
செய்தி:-
லங்கா4 ஊடகம்.