போலியான செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் ஊடகங்களுக்கு ஆப்பு! (பிரத்தியேக செய்தி)
இலங்கையில் சில ஊடகங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக பொய்யான செய்திகளை புனைந்தும், மிகைப்படுத்தகப்பட்ட தலைப்புக்களை போட்டும் அலங்கரித்து செய்திகளை வெளியிடுவதனால் வாசகர்கள் உன்மையான ஊடகம் எது என தேடி அலைகிறார்கள்.
அவ்வகையில் ஒரு சில யூடூப் சனல்கள் பொய்யான தலைப்பு மற்றும் போலி புகைப்படங்களை இணைத்து வீடியோ லிங்கை அழுத்த செய்து அதனூடாக பணம் தேடுவதாகவும் ஒரு கண்காணிப்பு கூறுகிறது.
இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இவ்வாறான சமூக ஊடகங்கள் தொடர்பில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.
இந்த சமூகஊடகங்களை சரியான முறையில் வெளிப்படுத்தி அதனூடாக இலங்கைக்கு டொலர் வருமானம் கிடைப்பதற்கு ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் காரணமாக சில அவதூறு பரப்பும் பொய்யான தகவல்களினை பரப்பும் ஊடகங்களுக்கு தடைகளும் விதிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
செய்தி
Lanka4 செய்தி பிரிவு.