தலைமைத்துவ பதவியால் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; சாணக்கியன் வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #M. A. Sumanthiran #Batticaloa #Lanka4 #TNA #sanakkiyan #sritharan
Mayoorikka
1 year ago
தலைமைத்துவ பதவியால் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; சாணக்கியன் வெளியிட்டுள்ள தகவல்

தமிழரசுக்கட்சியில் தலைமைத்துவ போட்டிகள் ஒருபோதும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 மக்கள் பாதிக்கப்படும் வகையில் வட் வரிகள் அதிகரிக்கும்போது அதற்கு ஆதரவாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் இனங்காணவேண்டும் இன்று பாடசாலைக்கான உபகரணங்கள் கூட வட் வரியினால் அதிகரிக்கப்பட்டுள்ளதனால் அதற்கான பொறுப்பினை வரி அதிகரிப்புக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 தமிழரசுக்கட்சியில் தலைமைத்துவ போட்டிகள் ஒருபோதும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.

 தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டி குறித்து வெளியில் உள்ளவர்கள் போலியான கதைகளை கூறி மக்களை குழப்புவதற்கு முயற்சித்தும் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லையனெவும் தெரிவித்தார். 

 வடகிழக்கிலிருந்தே இம்முறை தமிழரசுக்கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியாளர்கள் போட்டியிடுவதாகவும் கொழும்பிலிருந்து யாரும் போட்டியிடவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!