ஜனாதிபதி தேர்தலில் Lyca உரிமையாளர் சுபாஷ்கரன் போட்டியிடுகின்றாரா!
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அலிராஜாவை களமிறக்க புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷ்கரன் அலிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

அவர் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சி "அருணலு மக்கள் கூட்டணி" என்ற பெருந்தோட்ட அரசியல் கட்சியாகும்.
அதன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஏ.ஆர். திரு.கிருஷன் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையிலேயே புலம்பெயர் தமிழ் மக்கள் அல்லிராஜா சுபாஷ்கரனை வடக்கு கிழக்கு சார்ந்து பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Certified money launderer 👍🏽🤦🏽♂️ https://t.co/ePJ7vaJOCM
— Kusum Wijetilleke (@KusumW) January 4, 2024