ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் கீழ் நரிபுல்தோட்ட மக்களுக்கு வீடு கையளிப்பு!

#SriLanka #Batticaloa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news #House
Thamilini
1 year ago
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் கீழ் நரிபுல்தோட்ட மக்களுக்கு வீடு கையளிப்பு!

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் கீழ் இலங்கையில் துன்பத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதன் அடிப்படையில், இப்புத்தாண்டு தினத்திலும், தன்னுடைய உன்னதமிக்க சேவையின் பலனாக புதிய இல்லம் மற்றும் மலசலகூடம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1704286552.jpg

அந்த வகையில் கடந்த முதலாம் திகதி  (01.01.2024) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 97ஆவது இல்லமும், மட்டுநகரைச் சேர்ந்தவரும், தற்போது சுவிஸில் வசித்து வருபவருமானநவநாதன் நவநீதனின்  சொந்த நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இல்லமானது,  மட்டக்களப்பு மாவட்டம் - வவுனதீவு பிரதேசத்திற்குட்பட்ட நரிபுல்தோட்டம் எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.   

இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை நவநாதன் நவநீதன் அவர்கள் அமரத்துவமடைந்த தன் சகோதரன் நவநாதன் யசோதன் ( பங்கஜன்) நினைவாக வழங்கியிருந்தார்.  

images/content-image/1704286573.jpg

images/content-image/1704286591.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!